உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் இன்று மதுரை தமிழக வெற்றிக் கழக மாநாடு சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பிய ட்ராவல்ஸ் பேருந்து டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரை ஓட்டிச் சென்ற காட்டுநெமிலியை சேர்ந்த செந்தாமரை கண்ணன் மற்றும் டிராவல்ஸ் பேருந்து டிரைவர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.