கந்திலி அடுத்த தோக்கியம் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் கடந்த 10ஆம் தேதி நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள SBI ATM-மில் பணம் எடுக்க சென்றபோது அங்கு இருந்த அடையாளம் தெரியாத நபர் ஏடிஎம் மோசடியில் ஈடுபட்டு அதிலிருந்து 53 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து உள்ளார். அதனை தொடர்ந்து இன்று காலை லோகநாதன் தன்னுடைய ஏடிஎம் கார்ட் மற்றும் பணத்தை மீட்டு தருமாறு நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.