திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஷேக்பரிது மகன் சுல்தானுல் ஆரிப் (வயது 37). இவர் நடுக்கடை கடைத்தெருவில் சொந்தமாக சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை கடையை திறந்து சைக்கிளுக்கு காற்று பிடிக்கும் கம்பரேசர் இயந்திரத்தை போட்டுள்ளார். அப்போது கம்பரேசர் வெடித்து கடையில் உள்ள பொருட்களில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி கடை முழுவதும் எரிந்து சாம்பலாகியது.