தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருச்செந்தூர் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு என்று அதிகாலை 4:00 மணி அளவில் புறப்பட்டனர் கார் புதூர் அருகே நெல்லை தென்காசி நான்கு வழி சாலையில் சென்ற போது கட்டுபாட்டை இழந்து பள்ளத்திற்குள் பாய்ந்தது இதில் எட்டு பேர் படுகாயம் சீதபற்பநல்லூர் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்