பாறைப்பட்டி காளியம்மன் கோவிலில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்ட இந்துமுன்னணி நிர்வாகிகள் விநாயகர் சிலையை தெருக்களில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போலீசார் அனுமதி அளிக்காத இடத்தில் சிலை வைக்ககூடாது என்று தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. போலீசாரும், வருவாய்த்துறையினரும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை கைப்பற்றி வாகனத்தில் ஏற்றி கோட்டை குளத்தில் உள்ள தொட்டியில் கரைத்தனர்