திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு சேர்ந்த நளினி, பலராமன் தம்பதியர் எருமை மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இன்று தங்களது எருமை மாடுகளை மேய்ச்சலுக்காக நந்தியம்பாக்கம் பகுதிக்கு கொண்டு சென்றனர். நந்தியம்பாக்கத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் எருமை மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.