சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் துணை மின் நிலையத்தில், 11KV உலகம்பட்டி பீடரில் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன. இதனால், காலை 10 முதல் மாலை 5 மணி வரை எஸ்.புதூர், செம்மாம்பட்டி, படமிஞ்சி, குறும்பலூர், உலகம்பட்டி, ஆரணிப்பட்டி, மாந்தகுடிப்பட்டி, ப.நெடுவயல், அய்யாபட்டி, வேலம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ஜான் எஃப் கென்னடி தெரிவித்தார்.