நெற்குப்பையில் உள்ள பழமையான அரசமரத்து வயிரவ சித்தி விநாயகர் கோவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இரண்டு நாள் யாக வேள்வியில் கணபதி, நவகிரக ஹோமங்கள், கோபூஜை நடந்தன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் அபிஷேகம், தீப ஆராதனை நடத்தினர். விநாயகருக்கு புதிய வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.