திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நேற்று முழுவதும் இன்று காலை வரை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் 7 ரோடு சந்திப்பில் சேட்டு என்பவர் பல வருடங்களாக உணவு கடை நடத்தி வருகிறார் . இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக உணவு கடையில் பின்புறத்தில் இருந்த தனியார் வளாகத்தின் சுற்று சுவர் கனமழையின் காரணமாக இடிந்து விழுந்து கடை முழுவதும் சேதமடைந்தது, காலை நேரம் என்பதால் கடையில் ஆட்கள் இல்லாத நிலையில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.