நீண்ட நேரம் காத்திருந்தும் அந்த உதவி கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவர் தந்தையை தோளில் சுமந்தபடி மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்து ஆட்டோவில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இது குறித்து அரசு மருத்துவமனை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.