தோவாளை பூ மார்க்கெட்டுக்கு ஆரல்வாய்மொழி செண்பகராமன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது கடந்த சில நாட்களாக பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது கேரளாவில் இன்று ஓணம் பண்டிகை துவங்கியதாலும் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ள வாழும் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலையானது இன்று கடுமையாக உயர்ந்தது மல்லிகை பூ ஒரு கிலோ 1500 ரூபாய்க்கும் பிச்சிப்பூ 1250 க்கு விற்பனையானது