நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா இன்று காலை 6 மணி அளவில் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் நாளான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து கொடிபட்டம் கோவில் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோவில் சின்ன கொடி மரத்தில் வேத மந்திரங்கள் மேளதாளம் முழங்க கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது