சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வடகுடி ஸ்ரீ நல்லாண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து 37 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடு (12 ஜோடி), சிறிய மாடு (25 ஜோடி) என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில், 7 கிமீ மற்றும் 5 கிமீ தூரம் நிர்ணயிக்கப்பட்டது. முதல் நான்கு இடங்களைப் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.