திருவள்ளூரில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் சங்கம் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி வி.கணேசன் கலந்துகொண்டு நுகர்வோர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளித்து விளக்க உரையாற்றினார்.