பாம்பார் அணை பேருந்து நிறுத்தம் பகுதியில், சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதிய விபத்தில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பாம்பார் அணை பேருந்து நிறுத்தம் அருகே, அதே பகுதியை சார்ந்த நாகராஜ் என்பவரின் மனைவி வசந்தா (45), சாலையைக் கடந்து சென்றுள்ளார். அப்போது, பெங்களூருவிலிருந்து திருக்கோவிலூருக்கு குடும்பத்துடன் வந்த கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதி விபத்து