திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சுந்தரம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வியாபாரி மாது வயது 45 இவரது மனைவி சித்ரா வயது 35 இவர்கள் இருவரும் இன்று தங்களது பைக்கில் சுந்தரம்பள்ளி பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது காக்கங்கரை பகுதியில் வரும் பொழுது தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இது போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்