பழனி அருகே பச்சளநாயக்கன்பட்டியில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவனம் அமைந்துள்ளது. இங்கு புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீமத் அருணகிரிநாதர் சுவாமிகள் சன்னதிக்கு திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக மகா கணபதி பூஜை நடத்தப்பட்டு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.