தாயமங்கலத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் தாயமங்கலத்தில் முக்கிய வீதிகள் வழியாக மின் அலங்காரத் தேரில் பவனி வந்தார். இதற்கு முன்னதாக தாயமங்கலம் முத்துமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தாயமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து அம்மனை தரிசித்தனர்.