திருச்சி மாநகர் பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் இவர் பாலக்கரை தர்மநாதபுரம் பகுதியில் குழாய் போடும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் இந்நிலையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார் பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் இது குறித்து அவரது மனைவி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்