கடலூர் அருகே உள்ள சாவடியில் அம்மன் பிரதர்ஸ் கபடி கழகத்தின் சார்பாக ஐந்தாம் ஆண்டு மாபெரும் கபடி திருவிழா நடைபெற்றது இதில் தமிழக மற்றும் புதுவையைச் சேர்ந்த 45 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். போட்டியினை சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, திமுக மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, ஈரோடு மாவட்ட கபடி கழக செயலாளர் தங்கவேல் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.