தென்காசி ஒன்றிய கூட்டம் தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் கூட்டம் தொடங்கியவுடன் உடல் நலக்குறைவால் காலமான ஆணையாளர் இறப்புக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது இதன் தொடர்ச்சியாய் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன அப்பொழுது திமுகவைச் சார்ந்த மூன்று கவுன்சிலர்களும் அதிமுகவை சேர்ந்த ஒரு கவுன்சிலர் என நான்கு கவுன்சிலர்கள் கூட்டு அரங்கை புறக்கணித்துவிட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது