சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், சுண்ணாம்பிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் நாச்சியப்பன் (22), கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் கருப்பூர் சென்றபோது மதுரையிலிருந்து தஞ்சாவூர் சென்ற அரசு பேருந்து மீது மோதி சம்பவ இடத்திலே துடி துடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.