திமுகவை சேர்ந்த பழனி நகர மன்ற தலைவி உமாமகேஷ்வரி. இவர் நகர்மன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற 23வது வார்டு பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி என்ற பாஜக நிர்வாகி ஒருவர் அப்பகுதியில் உள்ள பெண்களை ஒன்றினைத்து மகளிர் சுய உதவிக் குழு அமைத்து வங்கியில் கடன் வாங்கித்தர உதவி செய்து உள்ளார். இதுகுறித்த தகவலறிந்த 23வது வார்டு திமுக கவுன்சிலரும், நகர்மன்ற தலைவருமான உமா மகேஸ்வரி கடும் எரிச்சல் அடைந்து, பாஜக பெண் நிர்வாகியை தொலைபேசியில் அழைத்து கடுமையாக மிரட்டும் ஆடியோ வைரல்.