திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சுமதி. இவர் கிருஷ்ணராஜ் என்பவருக்கு சொந்தமான காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஜெகநாதன் ஹார்டுவேர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆறு மாதமாக இங்கு பணிபுரிகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவர் கழிவறைக்கு செல்வதற்காக லிப்ட்டின் மூன்றாவது மாடிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரது தலைமுடி லிப்டில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார்.