சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.கோட்டை அருகே செம்மணிபட்டியில் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 31 ஜோடி மாடுகள் பங்கேற்றன. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகள் பெரிய மாடு (11 ஜோடி), சிறிய மாடு (20 ஜோடி) என இரு பிரிவுகளில் போட்டியிட்டன. 7 கிமீ, 5 கிமீ தூரமுள்ள பந்தயத்தில் வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.