திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கூவம் பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் திரிபுராந்தகம் மகள் தீபா(35). இவருக்கு வரும் 14 ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.இந்நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் அப்பகுதியில் உள்ள செய்யம்பாக்கம் அம்மன் கோவில் அருகே உள்ள மாந்தோப்பில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மப்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்