ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அரசின் வழிகாட்டுதல்கள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி அய்மம்ஜமால் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் காவல்துறையினர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு முன்னதாக விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிலைகளை கரைக்க கூடிய பகுதிகளை மாவட்ட எஸ்.பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்