சிங்கம்புணரியில் 31-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முன்னாள் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா துவக்கி வைத்தார். 46 சிலைகள் வண்ண விளக்குகளுடன் வாகனங்களில் ஊர்வலமாக சென்று, சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தெப்பக்குளத்தில் விஜர்சனம் செய்யப்பட்டது. இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், பாஜக ஏற்பாட்டில் நடைபெற்றது. சிவகங்கை எஸ்.பி சிவபிரகாஷ் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்