நெற்குப்பை பேரூராட்சியில் பகல் வெப்பம் கடுமையாக இருந்தது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இரவு ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது. கொன்னத்தான்பட்டி, பரியாமருதுபட்டி, ஆ.தெக்கூர், துவார், ஓவலிபட்டி, ஒழுகமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடலை, வெள்ளரி, உளுந்து போன்ற கோடை பயிர்களுக்கு இம்மழை வரப்பிரசாதமாக அமைந்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.