சிவகங்கை மாவட்டம் மு.கோவில்பட்டியில் அரசு பேருந்து மோதிய விபத்தில் கவி பிரபா சாதனா உயிரிழந்தார், அவரது அக்கா கவி பிரபா படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். ஆத்திரமடைந்த கிராம மக்கள் திண்டுக்கல்-காரைக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அமைச்சர் பெரியகருப்பன் பேச்சுவார்த்தைக்குப் பின், 6 மணி நேர சாலை மறியல் கைவிடப்பட்டு, போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.