ராமாபுரம் காவலராக இருந்து வருபவர் பிரபு. இவர் சமீப நாட்களாக கஞ்சா மற்றும் மது போதையில் காவல் நிலையத்திற்கு பணிக்கு வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், இன்று காலை காவலர் பிரபு, கஞ்சா மற்றும் மதுபோதையில் காவல் நிலையம் வந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த காவல் ஆய்வாளர் மற்றும் சக காவலர்கள் அவரை கண்டித்த போது அதிகாரிகளை தரக்குறைவாக பிரபு பேசியுள்ளார்.