மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் ஆகஸ்ட் 23,24,25 ஆகிய மூன்று தினங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்த வகையில் நேற்று 3 தொகுதிகளில் சுற்று பயணத்தை மேற்கொண்டார் அதனை தொடர்ந்து திருச்சியில் தங்கி இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தேமுதிக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்