மேல்அச்சமங்கலம் கிராமத்தில் மே1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில் மேல் அச்சமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை வைத்தனர் அதில் தங்கள் பகுதிக்கு நியாய விலை கடை அமைக்க வேண்டும், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் கோரிக்க வைத்தனர்.அதில் சிலர் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.