தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மத்திய மான்விளை கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மற்றும் அவரது மகன் ஆகியோரை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் நீங்கள் வண்ணார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீங்கள் உங்களுடைய குடி தொழிலை செய்ய வேண்டும் கோயிலுக்குள் மற்றும் குளத்திற்கு வரக்கூடாது கோயிலுக்கு குளத்திற்கு வந்தால் தீட்டு என்று கூறி வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்சியரகத்தை தேசிய சமூக நீதி கட்சியினர் முற்றுகையிட்டனர்.