திருப்பத்தூர் மாவட்டம் கதிரிமங்கலம் ஊராட்சி பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன் இவரின் வீட்டிற்குள் இன்று சுமார் 12 அடி நிறமுள்ள பாம்பு ஒன்று நுழைந்து உள்ளது. இதை பார்த்த தாமோதரன் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினார். இதுகுறித்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.