திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து ஆலாடு, ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியே மீஞ்சூர் செல்லும் தடம் எண் T40 அரசு பேருந்து, இன்று காலை வழக்கம் போல மீஞ்சூர் சென்று விட்டு மீண்டும் பொன்னேரிக்கு திரும்பியது. இந்த நிலையில் அரசு பேருந்து காட்டூரில் இருந்து தத்தைமஞ்சி நோக்கி வந்த போது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் மோதி ஒரு சக்கரம் கீழே இறங்கி பேருந்து அந்தரத்தில் நின்றது.