திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாறு அணை பகுதியில் அங்கன்வாடி மையம் வேண்டி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் 12 லட்சம் மதிப்பீட்டில் பாலாறு அணைப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில் குமார் திறந்து வைத்தார்.