மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அனைத்திந்திய நீதிக்கான வக்கீல்கள் சங்கத்தினர் மனு கொடுத்தனர். அந்த மனுவில், சிறுமலை வனப்பகுதிக்குள், கடந்த மாதம் ஒரு இளைஞரும், சிறுமியும் இருந்து உள்ளனர். அப்போது ரோந்து சென்ற வனத்துறையினர் இருவரையும் பிடித்து சிறுமியை தனியாக அனுப்பி வைத்துவிட்டு, அந்த இளைஞருக்கு அபராதம் விதித்து உள்ளனர். போலீசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேபோல் பள்ளி மாணவருக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.