காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் எழிலரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்