திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தின விழா மாவட்ட S.P.பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு, மேலும் கலை நிகழ்ச்சிகளும், காவலர் தின உறுதிமொழிகளும், போட்டிகளும் நடைபெற்றன.