தொண்டியில் உள்ள தனியார் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் 41 கோடி திட்டப் பணிகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 107.73 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்டுத்தப்பட்டுள்ளது எனவும் விரைவில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு ஏழரை கோடி ரூபாய் மதிப்பில் இருதய சிகிச்சைக்கான கேத் லேப் அமைக்கப்பட உள்ளதாகவும் மைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.