காயல்பட்டினம், ரத்னாபுரி சர்ச் வாசலில் மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து உள்ளே நுழைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை திருடி சென்று விட்டார். பைக்கை திருடி செல்லும் காட்சி அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களை வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்