அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி கடன் மேளா நடைபெற்றது. இதில் 164 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், 91 மாணவ, மாணவிகளின் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கபட்டு கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், செவிலியர் உள்ளிட்ட கல்விகளுக்கு 5.65 கோடி மதிப்பீட்டில் கல்வி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.