சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே கட்டுக்குடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் ஆரோக்கியசாமி (51) மூன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு, பேருந்தை வழிமறித்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது