மதுரைக்கு அடுத்தபடியாக மானாமதுரையில் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது. இதனையடுத்து திங்கட்கிழமை காலை தேரோட்டம் நடந்த நிலையில், இரவு தியாக விநோத பெருமாள் கோயிலுக்கு பூப்பல்லக்கில் அழகர் வந்தார். இந்நிலையில், அதிர்வேட்டுகள் முழங்க கோவிந்தா கோவிந்தா கோசத்தின் இடையே வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி சோனையா கோவில் பகுதியிலுள்ள வைகை ஆற்றில் இறங்கினார்.