ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகப் பகுதியில் டிஐஜி கேம்ப் ஆபிஸ் அருகே கழிவுநீர் கால்வாய் மேல் மூடியின் மேல் நேற்றிரவு அமர்ந்து ஒருவர் மது அருந்தியுள்ளார். அவர் திடீரென கழிவு நீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவ்வழியாக நடை பயிற்சிக்கு சென்ற பொது மக்கள் கழிவு நீர் வாய்காலில் உயிரிழந்த நிலையில் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்