திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணாலபட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.