திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கிரிவலப் பாதையில் பக்தர்களின் கார்கள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கிரிவலப் பாதையில் உள்ள ரோப் கார் நிலையம், வின்ச் நிலையம் , பாத விநாயகர் கோவில் மற்றும் பிற கோயில்களுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக கோயில் நிர்வாகம் பேட்டரி கார்களை கட்டணமில்லாமல் இயக்கி வருகிறது. டிவிஎஸ் நிறுவனம் சார்பில் 23 பேர் அமர்ந்து செல்லும் வகையில் பேட்டரி வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது.