வாலிநோக்கம் கிராமம் சாத்தார் கோவில் தெருவில் கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர்.பல ஆண்டுகளாக அப்பகுதில் வசித்து வரும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.