நிலக்கோட்டை அருகே ஜி.தும்மலப்பட்டியை சேர்ந்த முனியாண்டி 59, ஜி.தும்மலபட்டி கிளை தபால் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராக பணியாற்றி வந்தார். கணக்குகளை அதிகாரிகள் தணிக்கை செய்த போது, செல்வமகள் சேமிப்புத்திட்டம், சுகன்யா சம்ருதி யோஜனா, சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, குறுகியகால வைப்பு நிதி கணக்கு, மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்ட திட்டங்களில் 87 வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ரூ.52 லட்சத்து 5 ஆயிரத்து 650 கையாடல் செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது